தூத்துக்குடி அருகே உள்ள குமரெட்டியபுரம், சில்லாநத்தம், அய்யனடைப்பு, காயலூரணி, சோரீஸ்புரம் ஆகிய கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனித்தனியாக வந்து மனு அளித்தனர். அந்த மனுக்கள் விபரம்:
ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. கரோனா 3-வது அலை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும். இதனால் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.