புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் கொப்பியான் குடியிருப்பையும், ஆதிதிராவிடர் தெருவையும் இணைக்கக்கூடிய 1 கிலோ மீட்டரில் இணைப்பு சாலை உள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாதையை மறித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கொப்பியான்குடியிருப்பு பகுதி பொதுமக்கள், சமையல் பாத்திரங்கள், கால்நடைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று குடியேறி தர்ணாவில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.