Regional01

அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வுபெற்றவர்கள் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசுஊழியர் சங்கத்தின் மாவட்டப்பேரவைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் முத்து முகமது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்தானந்தம், மாவட்ட இணைச் செயலாளர் சங்கரசுப்பிரமணியம், முன்னாள் மாவட்டச் செயலாளர் நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் பாக்கியம் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஓய்வூதியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதிசந்தாவை உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யவேண்டும். மருத்துவ செலவுதிரும்பப்பெறும் தொகைக்கான விண்ணப்பங்கள் 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.விரைவாக மருத்துவ செலவினம் வழங்க வேண்டும். மத்திய அரசு 11 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கியுள்ளதுபோல் மாநில அரசும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT