Regional02

மின்சாரம் பாய்ந்து : ஒருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை அடுத்த வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணப்பன் (50). நெசவுத் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலையில் வயல்வெளியில் நடந்து சென்றார்.

அப்போது, அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தேங்கிக் கிடந்த தண்ணீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதனால், மின்சாரம் பாய்ந்து மண்ணப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மண்ணப்பன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT