சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பயன்படாத பகுதிகளில் நகருக்குள் வனம் அமைக்கும் பணிகள் பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் நடைபெற்று வருகின்றன.
இதில், சேலம் அம்மாபேட்டை மண்டலம் தாதம்பட்டி, ஆட்டோ நகர், வாய்க்கால் பட்டறை, வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் நகருக்குள் வனம் அமைக்க நிலங்கள் சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை மண்டலம் எருமாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.