தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி வடபாகம், தாளமுத்துநகர், புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், திருச்செந்தூர், பசுவந்தனை, கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, கயத்தாறு, எட்டயபுரம், குளத்தூர், தூத்துக்குடி மது விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில் பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 14 காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 19 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 188 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், தெர்மல் நகர், தாளமுத்துநகர், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், சிப்காட், குரும்பூர், ஏரல், சாயர்புரம், கோவில்பட்டி கிழக்கு, கொப்பம்பட்டி, நாலாட்டின்புதூர், சூரங்குடி, புதூர், நாசரேத் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய 17 காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 22 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி தென்பாகம், ஆறுமுகநேரி, கோவில்பட்டி மேற்கு ஆகிய 3 காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்களை வைத்திருந்த 22 பேரை கைது செய்தனர்.