Regional01

பள்ளியில் குரு பூர்ணிமா விழா :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது.

ஆடி மாதம் பவுர்ணமி நாளே குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர்களை போற்றும் விதமாக, அன்றைய தினம் குருவை கவுரவிப்பார்கள். அறியாமையில் இருந்து விடுபட்டு நல்வழியை காட்டுபவர் குரு. மாணவர்களுக்கு நல்வழி காட்டும் ஆசிரியர்களை கவுரவிக்கும் நாளாக குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டு வருகிறது.

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் நடைபெற்ற குரு பூர்ணிமா விழாவுக்கு பள்ளி முதல்வர் சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அனுராதா, தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசிர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி வி.மதன் வரவேற்றார். மாணவிகள் அபி நயா, சுபதர்ஷிணி இணையதளம் மூலமாக ஆசிரியர் களுக்கு நன்றி தெரிவித்து பேசினர்.

SCROLL FOR NEXT