சிதம்பரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பசுமை பூங்கா. 
Regional01

சிதம்பரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் பூங்கா :

செய்திப்பிரிவு

சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பசுமை பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகம் லால்கான் தெருவில்உள்ளது. இந்த அலுவலகத் துக்கு சிதம்பரம், புவனகிரி,காட்டுமன்னார்கோவில்,முஷ்ணம் ஆகிய வட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தின் மேல் தளத்தில் தனிவட்டாட்சியர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் நின்று பின்னர் அலுவலகம் உள்ளே சென்று மனு அளிப்பார்கள். இப்பகுதியில் பொதுமக்கள் உட்காருவதற்கு சிறிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் வரும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

இந்நிலையில் சார்- ஆட்சியராக மதுபாலன் பொறுப்பேற்றவுடன் அந்த அலுவலக பகுதியில் பூங்காஒன்றை ஏற்படுத்தி பொதுமக்கள் உட்காருவதற்கு சிமென்ட கட்டைகளை ஏற்படுத்தினார். பூங்கா முழுவதும் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அது தற்போது வளர்ந்து பசுமையுடன் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. பூங் காவையொட்டியுள்ள சுவற்றில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் அலுவலகத்தில் நுழைவு பகுதி அருகில் தொங்கும் தோட்டம் போல பல வகை செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT