தேனி நாடார் சரஸ்வதி பெண் கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா, காமராஜர் பிறந்த நாள், மாணவியருக்குப் பாராட்டு ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன. உறவின்முறை தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டி.ராஜ்மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
பிளஸ் 2-வில் சிறப்பிடம் பெற்ற தீக்க்ஷிதா, ஆர்.சுபேதா, வி.ரித்திகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளிச் செயலாளர் லட்சுமணன், இணைச்செயலாளர் ரமேஷ் குமார், முதல்வர் வசந்தா, துணை முதல்வர் கவிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.