Regional02

சதுரங்க கழகத்தின் செயற்குழு கூட்டம் :

செய்திப்பிரிவு

சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டுதிருப்பத்தூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயற்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தரன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், சதுரங்கப்போட்டி யில் ஆர்வமிக்க, திறமையான வீரர்களை அடையாளம் காண அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக சதுரங்கப்போட்டிகள் நடத்துவது, கரோனா காரணத்தால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ‘ஆன்லைன்’ மூலம் சதுரங்கப்போட்டிகளை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT