மதுராந்தகம் கோட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிக்கோயில் மேடு பகுதியில் வசித்து வரும் இருளர் குடும்பங்களைச் சேர்ந்த 68 பேருக்கு இருளருக்கான சாதிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினார். அப்போது சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளிடம் அவர்களின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்தார். நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வருவாய் வட்டாட்சியர் பருவதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.