Regional02

ஆடி முதல் வெள்ளி மற்றும் பவுர்ணமி : அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் :

செய்திப்பிரிவு

இந்நிலையில், ஆடி முதல் வெள்ளி மற்றும் பவுர்ணமியான நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில்களில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு, அவர்களது உறவினர்கள் வளைகாப்பு நடத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சமூக இடைவெளியை பக்தர்கள் கடைபிடிக்காமல் சுவாமி தரிசனம் செய்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT