Regional02

2-ம் நிலை காவலர் உடற்கூறு தேர்வுக்கு - கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் : தூத்துக்குடி எஸ்பி தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக் குமார் செய்திக்குறிப்பு:

இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்தாண்டு நடந்து முடிந்துள்ளது.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1,662 ஆண்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,231 ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 3-ம் தேதி முதல் உடல் திறனாய்வுத் தேர்வு நடைபெறும்.

26 முதல் 29-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 500 பேரும், 30-ம் தேதி 450 பேரும், 2-ம் தேதி 443 பேரும் உடற்கூறு தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உடற்கூறு தேர்வில் கலந்து கொள்ளவரும் விண்ணப்பதாரர்கள், அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தவறாமல் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆஜராக வேண்டும்.

இணையதளத்தில் இருந்து எடுத்த நுழைவுச்சீட்டு நகலில் புகைப்படம் இல்லாவிட்டால், புகைப்படத்தை ஒட்டி, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று வரவேண்டும். மேலும் அடை யாள அட்டை (ஆதார் கார்டு அல்லது ஏதாவது அடை யாள அட்டை) கொண்டு வரவேண்டும்.

அத்துடன் 4 நாட்களுக்குள் பெறப்பட்ட கரோனா இல்லை என்றசான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். செல்போன் கொண்டுவர அனுமதி யில்லை. உடற்கூறு தேர்வுக்கு வரும் போது சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறவுள்ளதால் தேர்வு விண்ணப்பத்தில் சமர்ப்பித்துள்ள அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். சாதாரண மேல்சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து வர வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT