Regional02

இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் :

செய்திப்பிரிவு

தனியார் துறையில் வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் தனியார் துறையில் வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ.வீரராகவராவ், இணை இயக்குநர் சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.31.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலக புதிய கட்டிடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், எஸ்.பி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டத்தில்...

பின்னர், எட்டுக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம், செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT