Regional01

நெல்லையில் அமைச்சர் நேருஇன்று ஆய்வு :

செய்திப்பிரிவு

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு திருநெல்வேலியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பாளையங்கோட்டை பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணிகள் மற்றும் வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

SCROLL FOR NEXT