Regional03

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை :

செய்திப்பிரிவு

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் காதர். இவரது மனைவி தஸ்லிமா நஸ்ரின் பானு. கடந்த 2016-ம் ஆண்டு குடும்பப் பிரச்சினை காரணமாக தஸ்லிமா நஸ்ரின் பானு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கடைய நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி, முகம்மது அப்துல் காதரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றம் சுமத்தப்பட்ட முகம்மது அப்துல் காதருக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT