‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்கள் பெறுவதில் திருப்பூர் மாவட்டம் தமிழகத்திலேயே 3-ம் இடத்தில் உள்ளது.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனும் புதிய திட்டத்தை திமுக அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்ஒரு பகுதியாக இந்த திட்டத்தில் குடிநீர் வசதி, சாலை, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் சுய தொழில் கடன்களுக்கான நிதியுதவி என பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வரை, 31 ஆயிரத்து 659 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டுள்ளன. அதில் 5 ஆயிரத்து 491 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 296 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
8 ஆயிரத்து 148 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 6 ஆயிரத்து 724 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அதிக மனுக்கள் பெறப்பட்ட பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளதாக திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.