சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் பகுதியில் தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் சேவூர் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், சின்னப்பதாஸ் (32) என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
இதையடுத்து, சேவூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து, சின்னப்பதாஸை கைது செய்தனர். அவரிடம் 5 லிட்டர் சாராயம், 50 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.