சக்திமசாலா நிறுவனம் தனது பணியாளர்களுக்கு, தனியார் மருத்துவமனை மூலம் இலவச கரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. முகாமை நிர்வாக இயக்குநர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
Regional02

சக்தி மசாலா நிறுவன பணியாளர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

சக்திமசாலா நிறுவனம் தனது பணியாளர்களுக்கு, தனியார் மருத்துவமனை மூலம் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் முகாமினை நடத்தியது.

ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கரோனா பரவலை தடுக்கும் முயற்சியில்,அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த 19, 20-ம் தேதிகளில், தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் செலுத்தி தங்களிடம் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட 650 பணியாளர்களுக்கு, இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் முகாமை நிர்வாகம் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, சக்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் குருமூர்த்தி, செந்தில் முருகன் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தனர்.

தனியார் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், ஈரோடு தன்வந்திரி பல்நோக்கு மருத்துவமனையின் செவிலியர்கள், சக்தி மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளை பணியாளர்களும் தடுப்பூசி முகாமில் இணைந்து பணியாற்றினர். முகாமிற்கான ஏற்பாடுகளை சக்தி மசாலா நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

SCROLL FOR NEXT