Regional03

ஒகேனக்கல் காவிரியாற்றில் - நீர்வரத்து 9,000 கனஅடியானது :

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,000 கனஅடியாக குறைந்தது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்துநேற்று காலை 9,000 கனஅடியாக குறைந்தது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 222 கனஅடியாக சரிந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 46.90 அடிதண்ணீர் உள்ளது.

இதனிடையே, அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT