சம்பா பருவத்துக்கேற்ற நெல்விதைகள் மானியத்தில் விவசா யிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். சம்பா பருவத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைத்திட வேளாண் துறை அறிவுறுத்தும் நடப்பு சம்பா பருவத்திற்கேற்ற நெல் விதை ரகங்கள் சிஆர்-1009. டிகேஎம்-13, என்எல்ஆர்-34449, டிஆர்ஒய்-3, சிஓ-51, சிஓ-50, பிபிடி-5204 ஆகிய விதைகள் கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. இதனுடன் நெல் பயிர்க்கான நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் மானியவிலையில் தரப்படுகிறது. விவசாயிகள் தவறாமல் இதனை பெற்று பயனடையலாம் என்று கூறப் பட்டுள்ளது.