Regional01

படைக்கலத் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசின் படைக்கலத் தொழிலகங்களை கார்ப்பரேட் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடக்கும் வகையில் படைக்கலன் தொழிற்சாலைகளை அத்தியாவசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி நவல்பட்டில் உள்ள எச்இபிஎப் தொழிற்சாலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆ.சத்திய வாகீசன் தலைமை வகித்தார். எச்ஏபிஎப் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் இரணியன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT