திருத்துறைப்பூண்டியில் மதுபாட் டில்களை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மது விலக்கு போலீஸார் 6 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மதுபாட்டில்களை கடத்தி வந்து போலீஸாரால் விடுவிக்கப்பட்ட 2 இளைஞர் களையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அருகே ஆலத்தம் பாடியில் கடந்த 4-ம் தேதி மதுவிலக்கு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தி சோதனை செய்த போது, அவர் கள் தங்களின் உடல் முழுவதும் 48 மதுபாட்டில்களை மறைத்து வைத்து, கடத்திச் சென்றது தெரியவந்தது.
அவர்கள் இருவர் மீதும் போலீ ஸார் வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மது கடத்தலின் போது பிடிபட்டவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர் பான வீடியோ சமூக வலைதளங் களில் வைரலானது.
தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்களை விடுவித்தது தொடர்பாக, திருத் துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீஸார் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மதுபாட்டில் களை கடத்தி வந்து, போலீ ஸாரால் விடுவிக்கப்பட்ட திருத் துறைப்பூண்டியைச் சேர்ந்த அருண்ராஜ்(28), கேசவன்(30) ஆகிய இருவரையும் ஆலிவலம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.