திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 2, சேர்வலாறு- 1, கடனா நதி- 5, குண்டாறு- 4, அடவிநயினார்- 6.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 109.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 547 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 72.35 அடியாக இருந்தது. அணைக்கு 28 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணையில் நீர்மட்டம் 68.90 அடியாக இருந்தது. அணைக்கு 70 கனஅடி தண்ணீர் வந்தது. 70 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராம நதி அணையில் நீர்மட்டம் 66.50 அடியாக இருந்தது. அணைக்கு 64 கனஅடி தண்ணீர் வந்தது. 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
சேர்வலாறு- 109.48 அடி (156 அடி), கொடுமுடியாறு- 28.75 (52.25), நம்பியாறு- 11.87 (22.96), வடக்கு பச்சையாறு- 16.50 (50), கருப்பாநதி- 63.32 அடி (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 123.25 (132.22).