திருநெல்வேலியில் 5 மாவட்ட பொதுப் பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மாநில பொதுப்பணித்துறை அமை ச்சர் எ.வ. வேலு பங்கேற்கிறார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை நடைபெறவுள்ளது.சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பங்கேற் கிறார்கள். புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல் படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.