திருநெல்வேலி அருகே குன்னத்தூரில் கரோனா தொற்று காலத்துக்குப்பின் கிரிவலம் செல்ல இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குன்னத்தூர் மலையை சுற்றி தென்திருப்பதி எனப்படும் வேங்கடமுடையான் பெருமாள் கோயில், ராகு ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத கோதபரமேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், பத்ரகாளி, உச்சினி மாகாளி, காளியம்மன், முப்புடாதி அம்மன் கோயில்கள் உள்ளன.
இங்குள்ள மலையில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கிரிவலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மேலத்திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி திருக் கோயில் செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில், மலையை சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சி கரோனா தொற்று காலம் முடிந்த பிறகு அரசு அறிவிப்பின்படி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.