அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதப்போகும் மாணவ, மாணவியருக்கான கட்டணத்தை அரசு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் எம்.முத்துசாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனு விவரம்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று செப்டம்பரில் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பலர் ஊரடங்கால் குடும்பம் பாதிக்கப்பட்ட நிலையில், தேர்வு கட்டணத்தை செலுத்த முடியாத அளவுக்கு வறுமை நிலையில் உள்ளனர். எனவே, 2020-2021ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வுக்கான கட்டணத்தை மா வட்ட நிர்வாகமே செலுத்தி உதவ வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.