Regional03

திருச்செந்தூர் கோயிலில் நகைகள் மறுமதிப்பீடு :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நகைகள் மறுமதிப்பீடு பணி தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2010-ம்ஆண்டு நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. அதன் பின்னர் தற்போது இந்துசமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்பேரில், கோயில் நகைகள் மறுமதிப்பீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான ரோஜாலிசுமதா தலைமையில் நடந்தது. சிவகங்கை மற்றும் திருச்சி மண்டல நகை மதிப்பீட்டு வல்லுனர்கள், திருச்சி மற்றும் நெல்லை மண்டல இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

இப்பணிகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் பார்வையிட்டார். இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி, உதவி ஆணையர் செல்வராஜ், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT