Regional02

கோவை, திருப்பூர், நீலகிரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை :

செய்திப்பிரிவு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத்தில் இமாம் இப்ராஹிம் பார்கவி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதேபோல, ஆர்.எஸ்.புரம், போத்தனூர், ரத்தினபுரி, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர்.

கரோனா ஊரடங்கு அமலில்இருப்பதால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப் பாளையம், அன்னூர், சூலூர், பெரியநாயக்கன் பாளையம், நீலம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் சிறப்புதொழுகை நடைபெற்றது.

உதகை

திருப்பூர்

SCROLL FOR NEXT