Regional02

வரும் 25-ம் தேதி வரை வரி வசூல் நடைபெறாது : திருப்பூர் மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி ஆணையர்கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், மென்பொருள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, ஜூலை 21 (நேற்று) முதல் வரும் 25-ம் தேதி வரை, திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டலங்களில் உள்ள கணினி வரிவசூல் மையத்தில், மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்கள், குத்தகை இனங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதிக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்கள், வசூல் பணி நடைபெறாது.

வரும் 26-ம் தேதி முதல்திருப்பூர் மாநகராட்சி மற்றும்மண்டல அலுவலகங்களில் உள்ளஇணையதளத்தில் வரியினங்களை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT