பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூரில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னை நார்க்கழிவிலிருந்து மக்கு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
பண்ருட்டி வட்டார உதவி வேளாண் இயக்குநர் விஜயா, வேளாண்அலுவலர் தில்லைக்கரசி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து கம்போஸ்ட் தயாரிக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் அங்கக உரங்கள் குறித்த சிறிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. உதவி வேளாண் அலுவலர்கள் தங்கதுரை,குமார், நாராயணசாமி, கார்முகிலன். வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.