Regional02

மனநலம் பாதிக்கப்பட்டவர் எரித்துக் கொலை :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இக் கட்டிடத்தில், நேற்று காலை ஆண் பிணம் ஒன்று இருந்ததைக் கண்டு பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கருங்கல்பாளையம் போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் ஈரோடு பாலக் காட்டூரைச் சேர்ந்த அசேன்சேட்டு (52) என்பதும், திருமணமாகாத இவர், கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது. இவரது தலையில் கல்லால் தாக்கிய மர்மநபர்கள், எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT