திருநெல்வேலியில் 68 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரை சேர்ந்த சண்முகம் என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவந்தார். மேலும் பல்வேறு வயல்வெளிகளில் கிடை போட்டும் வந்தார். அவ்வாறு திருநெல்வேலியிலுள்ள வயலில் ஆடுகளை கிடைபோட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் ஆடுகளை முக்கூடலுக்கு ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.
இரவானதும் மேலப்பாளை யத்திலுள்ள வயல்வெளியில் ஆடுகளை விட்டுவிட்டு தூங்கினார். அதிகாலையில் பார்த்தபோது 68 ஆடுகள் இறந்துகிடந்தன. ஆடுகள் இறப்புக்கான காரணம் குறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.