மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
Regional02

பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேலப்பாளையம் கரீம் நகர் மஸ்ஜித்ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் தலைமை இமாம் சாகுல் ஹமீது சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கரிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் மாநில தலைவர் சும்சுல்கா ரகுமானிசொற்பொழிவாற்றினார். மாநில செயலாளர்கள் யூசுப் அலி, செய்யதுஅலி, மாவட்ட தலைவர் மஸ்வூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலப்பாளையம் அத்தியூத்து தெருவில் பெரிய குத்பா பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அப்துல்வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தென்காசி

SCROLL FOR NEXT