Regional02

விநாயகர் சிலை திருட்டு :

செய்திப்பிரிவு

வேலூர் பாகாயம் அடுத்த இடையன்சாத்து பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வேலை செய்து வரும் பூசாரி நேற்று காலை கோயிலை திறந்து உள்ளே சென்றபோது, அங்கு அரசமரத்தடியில் ஒன்றரை அடி அகலத்திலும், 2 அடி உயரத்திலும் நிறுவப்பட்டிருந்த விநாயகர் கற்சிலை திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விநாயகர் கற்சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT