தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோனா மங்கலம் கிராமத்தில் வசிப்பவர் கன்னிவேல். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு வெங்கடேசன்(9), சுப்புலட்சுமி(6) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை என சேத்துப்பட்டில் வசிக்கும் திவ்யாவின் தாயார் அலமேலுவுக்கு, கன்னிவேல்கடந்த 10-ம் தேதி தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் கிடைக்கவில்லை
இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கன்னிவேல் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திவ்யா உட்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.