Regional01

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் : கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக தேவையான விண்ணப்ப படிவத்தை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்குத்தொகை ரூ.100 மற்றும் நுழைவுக்கட்டணம் ரூ.10 சங்கத்திற்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினராகலாம்.

நேரில் செல்ல முடியாதவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பி வைக்கலாம். பதிவு தபாலில் விண்ணப்பத்தை அனுப்பும்போது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணத் தொகையை அஞ்சலகம் மூலம் செலுத்தி அதற்கான ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர், முகவரி ஆகியவற்றையும் சேர்த்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

சங்கத்தில் உறுப்பினராகி சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற்று பயனடையலாம் என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT