தி.மலை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த 8 உழவர் சந்தைகள் நேற்று திறக் கப்பட்டன.
தி.மலை வட்டாட்சியர் அலு வலக வளாகம் அருகே மற்றும் தாமரை நகர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் என மாவட்டத்தில் உள்ள 8 உழவர் சந்தைகள் கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை திறக்கப்பட்டன. 50 சதவீத வியாபாரிகளுடன் உழவர் சந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வட்டாட் சியர் அலுவலகம் அருகே இயங்கி வரும் உழவர் சந்தையை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிய வேண்டும். அதேபோல், பொதுமக்களும் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.