வேட்டவலம் அருகே சொகுசு கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 தொழி லாளர்கள் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் வசித்தவர் முருகன்(40), வேளானந்தல் கிராமத்தில் வசித்தவர் வேலன்(55). இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில், வேலன் மற்றும் முருகன் ஆகியோர் நேற்று முன் தினம் இரவு வேளானந்தல் கிராமத்தில் இருந்து கீரனூர் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
கீரனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் மீது, விழுப்புரத்தில் இருந்து தி.மலை நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் முருகன் மற்றும் வேலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.