Regional01

நடராஜர் கோயிலில் முதியவரை தாக்கிய 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற முதியவரை தாக்கிய கோயில் ஊழியர்கள் 4 பேரில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் கீழ வீதி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து( 75). இவர் கடந்த 16-ம் தேதி இரவு 10 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கோயிலில் தூக்கும் நபர்களான ஓமகுளம் பகுதியை சேர்ந்த ராம்குமார்(30), மீதிகுடி பகுதியை சேர்ந்த சூரியப்பிரகாஷ் (22), செங்கட்டான் தெருவை சேர்ந்த வெற்றிவேலன் (21), அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் ஆகிய நான்கு பேரும் காளிமுத்துவிடம் ஏன் 10மணிக்கு மேல் சாமி கும்பிடவருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்எப்போதும் இது போல தான் வரு வேன் என்று அவர் கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் முதிய வர் காளிமுத்துவை ஆபாசமாக திட்டி, அவரை தாக்கி அவருடைய காலை பிடித்து இழுத்து கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காய மடைந்த காளிமுத்து சிதம்பரம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். இதுகுறித்து அவர் கடந்த 17-ம் தேதி சிதம்பரம் நகர போலீஸில் புகார் செய்தார். போலீஸார் ராம்குமார், செல்வம், சூரிய பிரகாஷ், வெற்றி வேலன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராம்குமார்,சூரிய பிரகாஷ், வெற்றிவேலன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT