Regional02

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - கொத்தடிமை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம் :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆணைபடியும், தொழிலாளர் ஆணையரின் அறிவுறுத்தலின்படியும் தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர் முறை சம்பந்தமாக புகார்களை தெரிவிக்க 18004252650 என்ற இலவச கட்டணமில்லா அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT