Regional02

ஆட்டோ மோதி இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி என்பவரது மகன் சுரேஷ் (34). இவர், சிங்கிலிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாக கடையநல்லூருக்கு ஆடுகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT