Regional01

25 ஆண்டுகள் சிறந்த பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய காவல் துறையினருக்கான பாராட்டு விழா, கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநகர சட்டம், ஒழுங்கு காவல் துணை ஆணையர் சக்திவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.

மேலும், காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்களின் குழந் தைகளுக்கான உயர்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT