திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ரவுடிகளை கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரவுடிகள் பட்டியலில் உள்ள தேடப்படும் நபர்களை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். 5 டிஎஸ்பிகள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. தனிப்படை போலீஸார், தேடப்படும் ரவுடிகளை பிடித்து கைது செய்தனர். விக்கிரமசிங்கபுரம், தாழை யூத்து, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சீவலப்பேரி, பத்தமடை, தாழையூத்து உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், கஞ்சா விற்பனை, மது விற்பனை உள்ளிட்ட செயல் களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.