தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஈரமாவு, ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்ப செயல்விளக்க பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதிகளைச் சேர்ந்த
பட்டியலினப் பெண்கள் 20 பேர் பங்கேற்றனர். முகாமை மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.வ.சுஜாத்குமார் தொடக்கி வைத்தாா். மீன் குச்சி, மீன் பர்கர், மீன் கட்லெட், மீன் கோலா உருண்டைகள் செய்வது குறித்த செயல்விளக்க பயிற்சியும், மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சொா்ணலதா கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைத் தலைவர் இரா.சாந்தகுமார், உதவி பேராசிரியர் கோ. அருள்ஒளி, மீன்பதன தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர் ப.கணேசன் கலந்துகொண்டனர்.