Regional02

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே உள்ள கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (50), சமையல் தொழிலாளி. இவர், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது, வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சுப்புராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT