தூத்துக்குடி நிகிலேசன் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்ற ராஜா( 52). இவர் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வந்தார். கடந்த 16-ம் தேதி கடையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ரங்கநாதன் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். சிலர் அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த மகேஷ், தாமோதரன் நகர் ஜோசப் மனோகர் சவுந்தர்ராஜ் (62) மற்றும் காவல் உதவி ஆய்வாளர் குருநாதன் ஆகிய 3 பேர் மீது கந்துவட்டி வசூலித்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜோசப் மனோகர் சவுந்தர்ராஜ் கைது செய்யப்பட்டார்.