Regional02

உதகையில் இணையவழியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இணைய வழியாக நேற்று நடைபெற்றவிவசாயிகள் குறைதீர்கூட்டத்தில், விவசாய சங்கங்களைச் சார்ந்தவிவசாயிகள், தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு பெறப்பட்ட விவரங்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான 23 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறும்போது, "தோட்டக்கலைத் துறை மூலமாக 2021-22-ம்ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-22-ம் ஆண்டுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலமாக 675 ஹெக்டேருக்கும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலமாக 650 ஹெக்டேருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணை நிலை நீர் மேலாண்மைத் திட்டம் மூலமாகநுண்ணீர்ப் பாசனத் திட்டம்அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணறுஅமைக்கவும், நீர்த்தொட்டி அமைக்கவும், டீசல் இன்ஜின் வாங்குதல்ஆகியவற்றுக்கு பின்னேற்பு மானியமும் வழங்கப்படும். மேலும், ஏடிஎம்ஏ திட்டம் தொடர்பான பயிற்சி தகவல்களை, வட்டாரத் தோட்டக் கலை உதவிஇயக்குநர்களை அணுகி விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

SCROLL FOR NEXT