Regional02

கிணற்றில் விழுந்த 3 மாத பூனைக் குட்டி மீட்பு :

செய்திப்பிரிவு

அவிநாசி அருகே செம்பாகவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் பனியன் தொழிலாளி முருகன். இவரது வீட்டில் வளர்த்து வந்த பூனை குட்டி, அருகே உள்ள பொது கிணற்றில் நேற்று முன் தினம் இரவு தவறி விழுந்தது. இதனால் முருகனின் மகன் விக்னேஸ்வரன் (9), 3 மாதங்களே ஆன பூனைக்குட்டியை எப்படியாவது மீட்க வேண்டுமெனக் கோரி அழுதுள்ளார்.

அவிநாசி தீயணைப்புத் துறையினர் சென்று, 130 அடி ஆழத்தில் 30 அடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பூனைக் குட்டியை மீட்டு சிறுவனிடம் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT