Regional02

19 மயில்கள் உயிரிழப்பு விஷம் வைத்தவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் அருகே வலசுபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்துகிடப்பதாக, திருப்பூர் கோட்ட வனத்துறை அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் நேற்று காலை தகவல் அளித்தனர்.

தோட்டத்தில் இறந்துகிடந்த 12பெண் மயில் உட்பட 19 மயில்களின்சடலங்களை வனத்துறை அலுவலர்கள் மீட்டு, கால்நடை மருத்துவர்,வனத்துறையினர் முன்னிலையில் அங்கேயே பிரேத பரிசோதனை செய்துவிட்டு தீயிட்டு எரித்தனர். இந்நிலையில், தோட்டத்தில் கிடந்த அரிசியை உண்டு மயில்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்துதோட்ட உரிமையாளரான விவசாயிபழனிச்சாமியை (60) பிடித்து விசாரித்தனர். இதில், விவசாயத்துக்குதொடர்ந்து இடையூறாக இருந்ததால், விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை வனத்துறையினர் கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT